கலைவேலைகள்

உட்செலுத்தும் கலை அனுபவத்தை உருவாக்கும் இந்த கலைவேலைகள், பார்வையாளர்களான உங்களை, தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் இவ்விஷயங்களைப் பற்றிய உங்கள் பதில்களை அளிக்க வரவேற்கிறது.

காட்சி கலை, பன்னூடக அமைப்புகள், குரும்படங்கள்,கதைசொல்லுதல், பாடும் வேளைகள், பொது உரையாடல்கள் என 9 வித கலைவேலைகளை, கூ டெக் புஹாட் மருத்துவமனையில் எதிர்நோக்கலாம்.

அவ்விடத்தில் உள்ள நிகழ்ச்சி நிரல் வழிகாட்டியோடு,உங்கள் வழியில், உங்கள் வேகத்தில், எந்த கலைவேலையை அனுபவிக்க வேண்டுமென தேர்ந்தெடுக்கலாம்.

தனிப்பட்ட கலைவேலைகளைப் பற்றிய விவரங்களுக்கும், அட்டவணைக்கும் மேலும் படியுங்கள்.

Watch all the short films here.

அட்டவணை
இரு தரப்புகள் இப்பொழுது: உட்செலுத்தும் கலை அனுபவம்
16 நொவம்பர் – 8 டிசம்பர் 2013
தலைப்பு இடம் நாள் Timeநேரம்
வார்த்தைகள் இல்லாமை பல்வேறு இடங்கள் தினமும் 24 மணிநேரம்
உள் வழிகளும் வெளி வழிகளும் பிரதான நடைக்கூடம் தினமும் காலை 9.30 – இரவு 8
நன்றாக வாழ்வது நன்றாக இறப்பது பிரதான நடைக்கூடம் தினமும் காலை 9.30 – இரவு 8
ஆ மா...அப்பொழுதும் இப்பொழுதும் பிரதான நடைக்கூடம் தினமும் காலை 9.30 – இரவு 8
சில பொருட்கள் இழப்புசில பொருட்கள் பெறு தல் பிரதான நடைக்கூடம் தினமும் காலை 9.30 – இரவு 8
விருப்பம் இல்லை பிரதான நடைக்கூடம் தினமும் காலை 9.30 – இரவு 8
சுற்று, சுற்று, சுற்று பிரதான நடைக்கூடம் தினமும் காலை 9.30 – இரவு 8
சொல்லும்போது எதை சொல்கிறோம் (இந்த செயலாக்கம் 8 டிசம்பர் 2013 அன்று முடிவுக்கு வந்தது)
நாளைக்கான பாடல்கள் (இந்த செயலாக்கம் 8 டிசம்பர் 2013 அன்று முடிவுக்கு வந்தது)

[ top ]




வார்த்தைகள் இல்லாமை
சொல்லாத எண்ணங்கள், வெளிபடுத்தாத உணர்வுகள்.
நம் ஆசைகளும், பயங்களும், விருப்பங்களும், தேவைகளும் யாவை?

இந்த கலை அமைப்புகள், நம்மை மெதுவடைய செய்து, நம் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும், கவனம் செலுத்த தயார்படுத்துகிறது. நம்மை சுற்றி நடப்பதை, புதிய பார்வையில், திறந்த கண்ணோட்டத்தோடு காண அது நம்மை வரவேற்கிறது.

[ top ]

உள் வழிகளும் வெளி வழிகளும்
தியானத்திற்கேற்ற ஒலிசூழலில்,சிந்தனைமிக்க பயணத்திற்குள் புகுந்து அதனை மேற்கொள்ள, இந்த அமைப்புகள் நம்மை வரவேற்கின்றன. இழப்பை சமாளிப்பது எப்படி, வாழ்க்கையின் போராட்டங்கள் மற்றும் தொடர, கடந்து செல்ல, விரிவாற்றலுடன் இருக்க,இவர்களை இயலசெய்வது என்ன என்று நோயாளிகள், பராமரிப்பு சேவை வழங்குவோர் மற்றும் உடல்நல கவனிப்பு வழங்குபவர் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்களால் வழிகாட்டப்படுங்கள்.

உங்கள் சொந்த பயணத்தை, வெளியேறி நினைத்து பார்க்க, இந்த அமைப்பு உங்களை வரவேற்கிறது – உங்கள் வாழ்விற்கு மதிப்பு சேர்ப்பது எது? மதிப்பை எடுப்பது எது?

[ top ]

நன்றாக வாழ்வது நன்றாக இறப்பது
இறப்போடு தங்களது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் அவை அவர்களுக்கு, வாழ்வது என்றால் என்ன, என்பதை பற்றி என்ன கற்றுக்கொடுத்தது என்று, உடல்நல கவனிப்பு வழங்குபவர்கள் பகிர்ந்து கொண்ட உள்ளார்ந்த கதைகள், உயிருடையது போன்று இயங்குகிற தொடர் குரும்படங்களில் உயிர் பிறப்பித்தன.

உயிர்ப்பூட்டுபவர்கள்: எம்பயுலெட், யுகி பன், டான் ச்சீ குவாங், ஜேம்ஸ் சீ. கே. டான்,
டான் வெய் கியோங்க், வீவிங்க் க்லௌட்சிலிருந்து ஷுவாங்கு ப்ரொஸ்

காப்பாட்சியர் ஜேஸ்மீன் ங்

Click here to download the list of short films

Watch all of the animations here.

[ top ]

ஆ மா...அப்பொழுதும் இப்பொழுதும்
இரு குரும்படங்கள் - சுருள் வாழ்க்கை சந்திக்கும் நிஜ வாழ்க்கை

தனது இறுதி நாட்களை மருத்துவமனையில் கழிக்கும் தங்கள் பாட்டியை, ஒரு குடும்பம் போய் பார்பதோடு, அவர் மறைந்த துக்கத்தை, வெவ்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்துவதை கூறும் கதை, அந்தொனி ச்செனின், ஆ மா எனும் படம்.

Watch Ah Ma by Anthony Chen here.

7 ஆண்டுகளுக்குப் பிறகு, பட உருவாக்குனர் ஜேஸ்மீன் ங், அதே நடிகர்களை மீண்டும் சந்தித்து, மரணம் மற்றும் இறப்பைப் பற்றிய இவர்களது போக்கைப் பற்றி உரையாடியதோடு, படத்தை எடுத்த போதிலிருந்து இவை எவ்வாறு மாறியுள்ளது என்பதை பதிவேடு செய்து ஆ மா மறு-பார்வையிடலில் வழங்கியுள்ளார்.

Watch Ah Ma Revisited by Jasmine Ng here.

ஃப்ரான்சில் இடம்பெற்ற 60ஆம் கான்ஸ் பட விழாவில், (குரும்படங்களுக்கான போட்டியில்) ஆ மா சிறப்பு பறைசாற்று பெற்றது. அன்மையில் இடம்பெற்ற 2013ஆம் ஆண்டின் கான்ஸ் பட விழாவில், கமெர டி’ஒர் எனும் உச்ச கௌரவவிருது அந்தொனி ச்செனுக்கு வழங்கப்பட்டது, இது சிங்கப்பூருக்கும் முதல் விருது.

[ top ]

சில பொருட்கள் இழப்பு, சில பொருட்கள் பெறுதல்
அன்புள்ள ஒருவரை அல்லது ஒன்றை இழக்கும் போது பிள்ளைகள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள்? அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?

பட உருவாக்குனர்கள் நூரைனி ஷஹ மற்றும் ஜேஸ்மீன் ங் வழங்கும் இந்த குரும்படத்தில்,பிள்ளைகளின் கவிதைகளைக் கேட்க, நாங்கள் உங்களை வரவேர்கிறோம்.ஒரு பிள்ளைபோன்றக் கோணத்தை மேற்க்கொண்டோமானால், ஒரு வேளை நீங்கள் கூட, இழப்பைப் பார்வையிடுவதில், புதிய வழிகளைக் கண்டறிவதோடு, அந்த வேளையில், நம்பிக்கைக்குப் புதிய ஆதாரங்களையும் கண்டுபிடிக்கலாம்.

Watch the short film here.

[ top ]

விருப்பம் – இல்லை
நீங்கள் அன்பு செலுத்துவோருக்கு எதனை விட்டு செல்ல நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்கள் விருப்பங்களை எழுத முடியுமானால், அவை என்னவாக இருக்கும்?

வழக்கத்திற்கு சற்று மாறுதலாக, உங்கள் விருப்பங்களையும் விருப்பமில்லாவற்றையும் திட்டம் எழுத நாங்கள் உங்களை வரவேர்கிறோம். நமக்கு வேண்டியது எது என்று மட்டும் யோசிக்காமல், நாம் இறந்த பிறகு, எது நடைபெறுவதைப் பார்க்க நமக்கு விரும்பவில்லை என்பதையும் யோசித்தால், நாம் உண்மையாக மதிப்பது எது என்று உள்ளுணர்ந்துத் தெரிந்துகொள்ளலாம்.

Download a copy of Will-Not (available in 4 languages) here, and complete this on your own or with someone you care about.

[ top ]

சுற்று, சுற்று, சுற்று
நிரந்தரமான மாற்றத்திற்கு இராட்டின காற்றாடி ஒரு சின்னம். வாழ்க்கை சக்கரத்தில், எதை பிடித்துக்கொள்வீர்கள், எதை விட்டுவிடுவீர்கள்? எதை நினைவுகூருவீர்கள், எதை மறந்துவிடுவீர்கள்?

உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்ககூடியவை எவை என்பதை சிறந்து பிரதிபளிக்ககூடியவையை, ஒரு இராட்டின காற்றாடி செய்து, அதில் எழுதவோ அல்லது வரையவோ செய்யுங்கள்.

[ top ]

சொல்லும்போது எதை சொல்கிறோம்
(இந்த செயலாக்கம் 8 டிசம்பர் 2013 அன்று முடிவுக்கு வந்தது)

மரணம் மற்றும் இறப்பு, ஒரு தடைக்கட்டான விஷயமாக இருக்கதேவையில்லை. இந்த ஒளிவுமறைவற்ற பேசும் கூட்டத்தொடரில், கதைகள், சிந்தனைகள் மற்றும் யோசனைகளை, வாழ்வின் பல கட்டங்களிலிருந்து வரும் எங்கள் பேச்சாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இறப்பின் இயல்பினை சந்திக்கும் தருனத்தில், நாம் எவ்வாறு வாழவேண்டுகிறோம் மற்றும் நமக்கு எது முக்கியம் என்பதையும், ஒருவேளை நாம் நினைவூட்டப்படுவோம்.

[ top ]

நாளைக்கான பாடல்கள்
(இந்த செயலாக்கம் 8 டிசம்பர் 2013 அன்று முடிவுக்கு வந்தது)

தினமும் நம் வாழ்வில் நாம் போடகூடிய வேஷங்களைக் கழற்றி எரிந்து, ஒருத்தரை ஒருத்தர், வினோதமான அடையாளங்களும் கதைகளும் சொல்லகூடிய தனிபட்ட நபராக கண்டால் என்ன ஆகும்? ஒருத்தருக்கு ஒருத்தர் எந்த பாடல்களைப் பாடுவோம்?

உடல்நல கவனிப்பு வழங்குவோர், பராமரிப்பு சேவை வழங்குவோர் மற்றும் நோயாளிகளைப் பேட்டி எடுத்து சேகரித்த மூலப்பொருள்களைக் கொண்டு, இந்த பன்னூடக நாடக நிகழ்ச்சி, இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நாளில், அவர்கள் பட்ட போராட்டங்கள் மற்றும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் சித்தரிக்கும்.

நடிப்போர் நூர் சுஹைலி பிண்டி சப்பாரி விஜயா, டான் வன் ட்சு
இயக்குபவர் கொக் ஹெங் லுவான் (கலை இயக்குனர், டிராமா பொக்ஸ்)

Click here to watch an excerpt of the performance.

[ top ]