அனுபவம்

மரணத்திற்கு என் செய்தி
மரணம் ஒரு நபரானால், நீங்கள் அதனிடம் என்ன சொல்வீர்கள்? சுயமாகவோ, குழுவாகவோ மரணத்திற்கு ஒரு செய்தி எழுதி உங்கள் புகைப்படத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
10am – 10pm
   
பகிர்ந்துகொள்ளுங்கள்!
#bothsidesnowsg #msgtodeath
இது சவப்பெட்டி இல்லை.
ஒரு சவபெட்டியினை ஓய்வு எடுக்கும் இடமாக வடிவமைக்க இயலுமானால், அதை எவ்வாறு வடிவமைப்பீர்கள்?
10am – 10pm
கலை அரங்கம் "வெளியாகுதல்"
இந்த ஆக்கப்பூர்வமான படைப்பு, நோய் மற்றும் அதனால் ஏற்படும் மரணத்தை எதிர்த்து போராடும் இரு குடும்பங்களின் கதையை சித்தரிக்கிறது. இக்குடும்பங்கள் எதிர்நோக்கும் நிலையை வேறு விதமாக கையாண்டிருக்க இயலுமா? நடக்கும் நிகழ்வுகளை தடுத்து நிறுத்தி, கதையின் முடிவை மாற்ற வாருங்கள். வாழ்க்கைக்கான ஒத்திகையில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்.
ஆங்கிலம், கன்றனியம்
7.30pm – 9pm
கலந்துரையாடல்
வாழ்வின் இறுதி நிலையில் ஏற்படக்கூடும் சங்கடங்கள் பற்றி வெவ்வேறு துறையிலிருந்து வந்துள்ள எங்கள் பேச்சாளர்களின் கருத்துக்களை கேட்க வாருங்கள். எதார்த்தம் மற்றும் உணர்வுப்பூர்வமான அவர்களின் வாழ்க்கைக் கதைகளையும் அனுபவங்களையும் கேட்டு பயனடையுங்கள்.
11am, 2pm & 5pm
வாழ்க்கையின் நினைவலைகள்
உங்கள் வாழ்க்கைப்பயணம் குறித்து ஒரு மறுபரிசீலனை எடுத்து, உங்கள் வாழ்க்கைச் சாதனை எதுவென்று நினைத்துப் பாருங்கள். எத்தகைய தடத்தை இந்த உலகத்தில் விட்டுச் செல்லவிருக்கிறீர்கள்?
10am – 10pm
   
பகிர்ந்துகொள்ளுங்கள்!
#bothsidesnowsg #lifermbr
நமது வாழ்க்கையின் காலம்
வாழ்க்கை என்பது நிமிடங்களால் அளவிடப்படுகிறதா, அல்லது நினைவுகளால் அளவிடப்படுகிறதா? இந்த வீடியோ மூலமாக மனித உடலை புத்தகமாக படித்து வாழ்வின் கதை அறியவும்.
10am – 10pm
வாழ்க்கைப் பயணம்: மேடு பள்ளங்கள்!
உங்கள் வாழ்வின் உயர்வு தாழ்வுகளை குறித்துப் பாருங்கள்! எப்படி இவை வாழ்தல் பற்றி உங்களது புரிந்துணர்வை செதுக்கின? இந்த பயணத்தில் எங்கு நீங்கள் தற்போது இருக்கிறீர்கள்?
10am – 10pm
மொம்மல்லாட்ட நிகழ்வு “காற்று வீடு வந்தது”
இது ஒரு முதிய தம்பதியினரது வாழ்வின், இறுதிக் கட்ட முடிவுகள் எடுக்கும் போராட்டக் கதையை, ஒரு தெருப்பூனையின் வாயிலாக சொல்லப்படும் மொம்மலாட்ட நிகழ்வு. திரு லிம் அவர்களுக்கு புற்று நோய் என்று தெரிந்தவுடன், அவர மறதி மிகுந்த மனைவியை தனக்குப் பின்னால் பாதுகாக்கும் ஏற்பாடுகள் செய்வதோடு மரணம் பற்ற்ய தனது சொந்த பயங்களை சந்த்திக்கிறார்.
ஆங்கிலம் மற்றும் மெண்டிரீன் மொழிகளில் படைக்கப்படும்.
6.30pm – 7pm
சமூக உரையாடல்கள்
ஒவ்வொரு நாளின் இறுதியிலும், உங்களை சுற்றியுள்ளவர்களுடன் ஒன்றாக இணைந்து மரணத்தோடு வாழ்வது பற்றி உரையாடுங்கள். தேனீரும், உணவு பண்டங்களும் தயாராக உள்ளன; கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கட்டும்!
9pm – 10pm
ஓய்விடம்
காபி கடை; வீட்டின் அறை; சவப்பெட்டி இம்முன்று இடங்களையும் கற்பனையில் நிறுத்தி, அவ்விடங்களில் கேட்கும் குரல்களையும் சத்தங்களையும் நினைவு கூர்ந்து, மரணத்தை வேறொரு கண்ணோட்டத்தில் காண முற்படுங்கள்.
10am – 10pm
சுற்று சுற்று சுற்று
வாக்கையின் முடிவில், எந்த எண்ணங்கள் மரணத்தை ஏற்றுக் கொள்ள சுலபமாய் இருக்கும்? சுழற்சக்கரத்தில் எழுதியோ வரைந்தோ அவற்றை காற்றில் சுழல விடுங்கள்.
10am – 10pm
வாழ்க்கை பாடங்கள்
இந்த புகைப்பட அங்கத்தின் மூலம், வாழ்க்கை தமக்கு கற்றுக்கொடுத்த பாடங்களைப் பற்றி மூத்தோர் தங்களது சொந்த கருத்துக்களை பகிர்ந்தல்.
10am – 10pm
நடவடிக்கை
வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய கேள்விகள். உங்கள் பதில்களை என்ன இருக்கும்?

திட்டமிட்ட செயல்பாடுகள்:

10am – 10pm  :  பங்கெடுப்பு கலை நடவடிக்கைகள் மற்றும் அங்கங்கள்
11am, 2pm & 5pm  :  உரைகள்
6.30pm – 7pm  :   பொம்மலாட்ட நிகழ்வு “காற்று வீடு வந்தது”
7.30pm – 9pm  :  பார்வையாளர் கருத்திற்கேற்ப அரங்கேறும்ச்ச் நாடகம் “ வெளியேற்றம்”
9pm – 10pm  :  சமூக உரையாடல்கள்