வளர்ச்சியும் நாகரீகமும் அடைந்து வரும் நமது நகரில், செயற்கையானது இயற்கையின் இடத்தை அபகரித்துவிட்டது.

இயற்கையோடு ஒன்றிணைந்து வசிப்பவர்களால், வளர்தல், வாழ்தல், முதிர்தல், இறத்தல், போன்ற மனித வாழ்வின் ஒவ்வொரு எதார்த்தமான நிலையையும் உணர முடிகிறது. ஆனால், நகரில் வாழும் நாமோ தினம் தினம் உயிர் வாழ்வதிலேயே அதிக கவனம் செலுத்துவதால், வாழ்வின் மற்ற நிலைகளை உணர்த்தும் நிகழ்வுகளை மறைத்து விட முற்படுகிறோம்.

நாம் அதை மறக்க எண்ணினாலும், மரணம் என்பது மனித வாழ்க்கையின் ஓர் அம்சமாகும். எனவே, நாம் மரணத்தைப் பற்றி சிந்திக்கவும், வாழ்வின் அம்சமென அதனை ஏற்கவும் வழிவகுக்காத நகரம், ஈரமற்றதாகும்.

இறத்தலின் அனுபவத்தை வழங்குவதற்காகவே இரு புறங்கள், இப்போதே கலைக் குழு ஒரு உணர்வுப்பூர்வமான கலை அனுபவத்தை தயாரித்துள்ளோம். வாழ்வின் இறுதி நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றிய உரையாடல்களை மக்கள் தயக்கமின்றி சகஜமாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இத்தகைய தலைப்பை பொது இடங்களில் படைக்கிறோம்.

தயாரிக்கப்பட்டுள்ள பல கலை படைப்புகளை கண்டு, உங்களின் மனிதத்தன்மை மற்றும் இறப்பு பற்றி ஆராயவும், கண்ணியமான சாவின் அர்த்தம் பற்றிய உங்களின் கருத்துகளை முன்வைக்கவும், உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இப் படைப்பை பெரிதும் ஆதரித்த லியன் அறக்கட்டளை வாரியம் மற்றும் ஆங் சின் மோ அறக்கட்டளை வாரியத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி. வாழ்வையும் மரணத்தையும் பாரபட்சமின்றி ஏற்கும் நகரமே மனித நேயமுடையது என்று நம்பி, இந்த கலை படைப்புக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும் சமூக பங்காளிகளுக்கும் எங்களின் உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கோ ஹெங் லுயன்
கலை இயக்குனர்
இரு புறங்கள், இப்போதே